தொலைநோக்கு:
தமிழ் மக்களாகிய நாம், நமது தமிழ் மொழி, மரபு, அடையாளம் ஆகியவற்றில் பெருமிதம் கொள்கின்றோம்; அத்துடன் நாம் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் நிலைநிற்க வேண்டும்.
தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல, அது பண்பட்ட நாகரிகம்; மேலும் வரலாற்றுவழியே தமிழ்நாடும் தமிழீழமும் தன்னாட்சி உரிமையும் இறையாண்மையும் கொண்ட நாடுகள் ஆகும்.
கல்வி, பண்பாட்டுப் பரிமாற்றம், கூட்டுச்செயல் வழியாகப் பன்னாட்டுப் பிணைப்புடன் கூடிய வலிமையான தமிழ் இனத்தை உருவாக்க வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முயல்கிறது. இது பரந்த அன்பு, அடையாளம், இரக்கம், பண்பாட்டுப் பாதுகாப்பின் வழி செழித்து வளர்கிறது.
தமிழரின் விழுமியங்களைக் காக்க தமிழர் நாம் அனைவரும் கைகோத்து ஒன்றிணைந்து மனிதகுல முன்னேற்றத்திற்குப் பங்களித்து, தமிழ் மொழி, பண்பாட்டு மரபை, பெருமையுடனும் ஒற்றுமையுடனும் அன்புடனும் கொண்டாடும் ஓர் உயிர்த்துடிப்பான எதிர்காலத்தைக் கனவு காண்கிறோம்.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களாகிய நாம் அனைவரும் விழுமியங்களைக் காப்பாற்றிப் பாதுகாக்கும் பொருட்டுக் கைகோத்து ஒன்றிணைவோம்; மனிதகுல முன்னேற்றத்திற்குப் பங்களிப்போம்; நமது தமிழ் மொழி, நமது பண்பாட்டு மரபு ஆகியவற்றைப் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் அன்புடனும் கொண்டாடுவோம். இவை அனைத்தும் நிறைந்த ஓர் உயிர்த்துடிப்பான எதிர்காலத்தைக் கனவு காண்கிறோம்.
Vision:
We envision a world where the Thamizh people stand strong and united, proud of their language, heritage, and identity.
Our belief is rooted in the truth that Thamizh is more than a language—it is a civilization, and that Thamizh Nadu and Thamizh Eelam are historic Nations with the inherent right to self-determination and dignity.
Through education, cultural exchange, and collective action, NATNA strives to build a globally connected and empowered Thamizh community—one that thrives through shared identity, compassion, and cultural preservation.
We dream of a vibrant future where Thamizh people everywhere join hands in purpose, contribute to the betterment of humanity, and celebrate their linguistic and cultural legacy with pride, solidarity, and love.