தமிழர் கூட்டமைப்பின் மாபெரும் முதல் மாநாடு --- வட அமெரிக்கத் தமிழர்களுக்கு அழைப்பு !
அன்புடையீர், வணக்கம்!
தமிழ் இனம் எல்லா உரிமைகளும் வளங்களும் பெற்று செழித்தோங்கி வாழ வேண்டுமாயின், தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுத்து வெற்றிபெறச் செய்வது காலத்தின் கட்டாயம்! இதற்காகவே, வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc.) தொடங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வமைப்பின் குறிக்கோள்கள், செயல் திட்டங்கள், நிர்வாகக் குழு, சட்ட வரைவு ஆகியவற்றை www.thenatna.org இணையத்தில் காணலாம்.
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதல் மாநாடு வரும் ஏப்ரல் 5, 2026, ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன், டி. சி. புறநகரில் (Washington, DC Metro Area) நடைபெற உள்ளது. தமிழ்த்தேசியம் எனும் விழுமிய கொள்கையின் இன்றியமையாமையை விளக்குவதும் செயல் திட்டங்களை வகுப்பதும் மாநாட்டின் முக்கியமான குறிக்கோள்கள். அத்துடன், விரைவில் தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் பற்றி விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றி, பரப்புரை செய்யத் திட்டமிட்டு வருகிறோம். வட அமெரிக்காவில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.Venue: Reston Community Center, 2310 Colts Neck Road, Reston, Virginia 20191, USATime: April 05, 2026 - 9:30 AM to 5:00 PM (Eastern Time)
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வழங்குவார்கள்; கலை நிகழ்ச்சிகள், அறுசுவை விருந்து என மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் தன்னார்வலர்களால் செம்மையாகச் செய்யப்பட்டு வருகின்றன.
உங்கள் வருகையைப் பதிவு செய்ய: https://www.thenatna.org/registerநுழைவு & உணவு ஆகியவற்றுக்கு கட்டணங்கள் இல்லை.
தமிழர் ஓர்மையை நிலைநாட்டி, உரிமையை வென்றெடுப்போம்! உங்கள் அனைவரையும் மாநாட்டில் சந்தித்து உரையாட ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அன்புடன்,வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (North American Thamizh National Association, Inc. --- சுருக்கமாக, “NATNA”/ “நேட்னா”)